Trending

6/recent/ticker-posts

வேடமிட்ட இஸ்ரேலிய படையால் 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை...!


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குள் பலஸ்தீனர்கள் போன்று வேடமிட்டு புகுந்த இஸ்ரேலிய படையினர் இரு சகோதரர்கள் உட்பட மூவரை சுட்டுக்கொன்றனர்.

ஜெனின் மருத்துமனைக்குள் ஒளிந்திருந்த மூன்று ஹமாஸ் உறுப்பினர்களே சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேடமிட்டு வந்த இஸ்ரேலிய துருப்புகள் துப்பாக்கியால் குறிபார்த்தபடி ஊடுருவுவது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதில் ஜெனின் மயானத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசல் அல் கசாவி, அவரது சகோதரர் முஹமது மற்றும் மற்றுமொரு ஆடவரான ஜலம்னே ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை தொடர்ந்து சுற்றிவளைப்புகளை நடத்தி வருவதோடு கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் அங்கு குறைந்தது 378 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments