Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



சூரி நடிக்கும் 'கருடன்' திரைப்படத்தின் முதல் பார்வை, பிரத்யேக காணொளி...!


'விடுதலை பார்ட் 1' படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் வெற்றி பெற்றிருக்கும் நடிகர் சூரி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கருடன்' எனும் திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'. இதில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, ஆர். வி. உதயகுமார், வடிவுக்கரசி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பனி வழங்குகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வையாக இரண்டு வெவ்வேறு பதாகைகளையும், படத்தின் மையக் கருவை விவரிக்கும் வகையில் பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த காணொளியில் ''விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தால் எப்பவும் நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தால் ஜெயிக்கிறது என்னைக்குமே சொக்கன் தான்..'' என்ற வசனம் இடம் பெற்றிருப்பதால், பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே 'விடுதலை பார்ட் 1' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கருடன்' திரைப்படத்தின் காட்சி துணுக்கும் அவரை எக்சன் நாயகனாக சித்தரிப்பதால், இப்படத்திற்கு ரசிகர்களிடையேயும் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments