Trending

6/recent/ticker-posts

Live Radio

வங்கி கடன் வாங்க விரும்பும் வியாபாரிகளுக்கான நல்ல செய்தி…!



ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் எமக்கு வழங்கப்படவுள்ளன. இதுவும் முன்னர் போன்றே, வங்கி அமைப்பு ஊடாக சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு தனி இலக்கத்துடனான வட்டி வீதத்தில் வழங்க நாம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். அதற்காக இன்னும் சில மாதங்கள் செல்லும். மேலும் கடன் உத்தரவாத நிறுவனத்தினையும் (credit guarantee institution) ஆரம்பித்து முன்னெடுத்து செல்ல உள்ளோம். இதன் முழுமையான நோக்கம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் நலனுக்காகும்..”

Post a Comment

0 Comments