Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஸ்ரீலங்காகிரிக்கெட் உடன் இணைந்து செயற்படவுள்ளேனா? மறுக்கின்றார் ஜொன்டிரொட்ஸ்...!


ஸ்ரீலங்கா கிரிக்;கெட் உடன் தான் இணைந்து பணியாற்றவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டிரொட்ஸ் மறுத்துள்ளார்.

இலங்கையின் பயிற்றுவிப்பாளர்களிற்கு அவர்களின் திறமையை தகுதியை மேலும் அதிகரிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட துறைகளில் காலத்திற்கு காலம் பயிற்சிகளை வழங்குவதற்காக உலகின் மிகவும் தலைசிறந்த திறமையாளர்களை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதற்காக தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டிரொட்ஸ் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத்அருண் உட்பட சிலரின் சேவைகளை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஜொன்டிரொட்ஸ் இதனை நிராகரித்துள்ளார்.

இது எனக்கு புதிய செய்தி இது குறித்து உண்மையை ஆராயுங்கள் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments