பெர்முடாவிலிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நோக்கிச் சென்ற மருத்துவப் போக்குவரத்து விமானம் தொடர்பை இழந்த நிலையில், அதன் சிதைந்த பாகங்கள் நான்டக்கெட் கடற்கரைப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
‘கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-100’ ரக விமானத்தில் இரண்டு விமானிகள், இரண்டு மருத்துவப் பணியாளர்கள், ஒரு நோயாளி மற்றும் அவரது உறவினர் என ஆறு பேர் பயணித்துள்ளனர்.
விமானத்துடனான தொடர்பு சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு விமானம் சுமார் 24,000 அடி உயரத்திலிருந்து 11,000 அடி உயரத்திற்கு வேகமாக இறங்கியதாக கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பயணித்தவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கப்பல்கள், ஹெலிக்கொப்டர்கள் மற்றும் விமானங்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமானத்தில் பயணித்த நான்கு கனேடியர்கள் மற்றும் இரண்டு பெர்முடா நாட்டவர்களின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



0 Comments