
நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தஸநாயக்க இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
தனது குழந்தைக்காக பராமரிப்புச் செலவு வழங்குமாறு கோரி பெண் விமானி ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாடு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சமிக்க கருணாரத்ன நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



0 Comments