Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

டிசம்பரில் அங்குரார்ப்பண லங்கா ரி10 லீக் கிரிக்கெட்...!

அங்குரார்ப்பண லங்கா ரி10 லீக் கிரிக்கெட் இந்த வருடம் டிசம்பர் 12ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரை அரங்கேற்றப்படவுள்ளது.

கடந்த வருடம் நடைபெறவிருந்த இப் போட்டி கைவிடப்பட்டிருந்தது.

எனினும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சர்வதேச போட்டிகள் நடைபெறாததால் அக் காலப் பகுதி இப் போட்டியை நடத்த பொருத்தமான காலமாக அமையும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் கருதுகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் வருடாந்தம் நடத்தப்படும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லங்கா ரி10 லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் தேசிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் பங்குபற்றி கலக்கவுள்ளனர்.

இலங்கையில் முன்னேறிவரும் இளம் வீரர்களுக்கும் இந்தப் போட்டிகயில் பங்குபற்ற வாய்ப்பு கிடைப்பதுடன் சர்வதேச வீரர்களிடம் இருந்து அவர்களுக்கு சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

'லங்கா ரி10 லீக் கிரிக்கெட் போட்டி பெரு வெற்றியைத் தரும் என நான் ஆணித்தரமாக நம்புகின்றேன். அத்துடன் இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் திறமையை மேலும் அதிகரிக்க இது உதவும். இந்த சுற்றுப் போட்டி கிரிக்கெட் ஆர்வலர்களைக் கவரும் அதேவேளை, இந்த வடிவ போட்டியை உலகம் முழுவதும் பிரபல்யம் அடையச் செய்வதற்கு இப் போட்டி உந்துசக்தியாக அமையும்' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

லங்கா ரி10 லீக் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான உரிமைத்துவத்தைக் கொண்டுள்ள ஐபிஜி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை கிரிக்கெட்டில் இன்னும் ஒரு அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான படிக்கல்லாக இது அமைகிறது. இந்த லீக் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களை ஒன்றிணைய செய்கிறது. அத்துடன் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு காணக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு பரபரப்பான போட்டியின் மூலம் புதிய வரலாறு படைத்து கிரிக்கெட் விளையாட்டை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்' என்றார்.

'இலங்கையில் ரி10 லீக் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். மேலும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கிவரும் ஆதரவுக்கு நாங்கள் நன்றியடைவர்களாக இருக்கிறோம். ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த வகை லீக் கிரிக்கெட்டுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதால் அது குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இந்த வகை கிரிக்கெட் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கவுள்ளது' என நிகழ்ச்சிக்கான உரிமைத்துவ பங்குதாரரரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரிடென் குளோபல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஷாஜி உல் முல்க் தெரிவித்தார்.

லங்கா ரி10 லீக் போட்டிகள் யாவும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குகளில் மின்னொளியில் நடத்தப்படும்.

நன்றி...
வீரகேசரி

Post a Comment

0 Comments