Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'இடி முழக்கம்' பட அப்டேட்...!


இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இடி முழக்கம்' எனும் படத்தில் இடம்பெற்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

மண் சார்ந்த படைப்புகளை வழங்கி தேசிய விருதுகளையும், சர்வதேச விருதுகளையும் குவித்து வரும் படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'இடி முழக்கம்' திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், காயத்ரி, சுபிக்ஷா, அருள் தாஸ், கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தை ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'அடி தேனி சந்தையிலே தேரு போல வந்தவளே..' என தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் ல. வரதன் எழுத, பின்னணி பாடகர் அந்தோணி தாசன் மற்றும் பாடகி மீனாட்சி இளையராஜா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

பாடல் கிராமிய மணத்துடன் கூடிய துள்ளலிசை பாடலாகவும், எளிய மக்களின் வசீகரத்துடன் கூடிய பாடல் வரிகளுடனும் இருப்பதால் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

Post a Comment

0 Comments