Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் விற்பனை : அபிலாசைகளை பெற்றுக்கொள்ள எதிர்வரும் மாதம் வரை காலவகாசம்...!


ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவற்காக தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்வது ஐந்தாவது முறையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை விற்பனை செய்வதற்காகத் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் முதலீட்டாளர்கள் எவரும் முன்வராத நிலையில் அபிலாசைகள் பெற்றுக்கொள்ளும் காலவகாசம் ஐந்தாவது முறையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களின் பட்டியலில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.பணியாளர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணிகளால் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமான சேவைகள் தாமதமாகுவதும், இரத்தாகுவதும் கடந்த காலங்களில் வழமையாகி விட்டதொரு செயற்பாடாக காணப்பட்டது.

கடந்த சனிக்கிழமை ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் தாதமதாகியதால் தேசிய மற்றும் சர்வதேச பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டார்கள். இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துறைமுகம், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விமானத்துக்குள் எலி புகுந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் 06 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் நேற்றும் ஒருசில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி...
வீரகேசரி

Post a Comment

0 Comments