Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்து சமுத்திரம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் என்ன ? செங்கடல் தாக்குதல்களை சுட்டிக்காட்டி சிங்கப்பூர்...!


செங்கடலில் காணப்படும் ஆபத்தான நிலைமை உட்பட பல காரணங்களால் இந்து சமுத்திர பிராந்தியம் பொருளாதார பலவீனங்களை எதிர்கொள்வதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏழாவது இந்துசமுத்திரமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடல்பயண சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செங்கடலில் ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் சமீபத்தைய தாக்குதல்கள் முக்கிய கடல்பாதைகளிற்குஏற்படக்கூடிய ஆபத்தையும் இதன்காரணமாக இந்துசமுத்திரத்தில் எண்ணெய் மற்றும் கப்பல் கொள்கலன்கள் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய ஆபத்தையும் வெளிப்படுத்தியுள்ளன என சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்துசமுத்திரன் முக்கிய பாதைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எவையும் குறிப்பாக செங்கடல் ஹோர்மஸ் நீரிணையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உலகின் முக்கிய வர்த்தக மையமான சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரகடற்பயணத்தின் சட்டரீதியான மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டியுள்ள சிங்கப்பூர் அமைச்சர் அனுமதியின்றி வாடகையின்றி கப்பல்கள் பயணம் செய்ய அனுமதிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments