எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பலஸ்தீனத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டால், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் ஒரு குழு விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் சம்மதம் தெரிவித்திருப்பது பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
0 Comments