Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கொழும்பு நகரிலுள்ள ரயில்வே கட்டிடங்களை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி...!


கொழும்பு நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரதான புகையிரத நிலையங்களின் கட்டிடங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2023 நவம்பரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கொழும்பு நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி ஆகிய புகையிரத நிலையங்களிலுள்ள கட்டிடங்களை வர்த்தக நிலையங்களாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெஹிவளை மற்றும் கல்கிசை புகையிரத நிலையங்களை நிர்மாணித்தல், கண்காணித்தல் மற்றும் ஒப்படைத்தல் நடைமுறைகளை அரச-தனியார் பங்காளித்துவத்துடன் தவிர்த்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு சமர்ப்பித்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments