Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

துஷ்மந்த சமீரவுக்கு இன்று ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு...!



இன்று (26) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விளையாட உள்ளார்.

அவர் இன்று முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

50 இலட்சம் இந்திய ரூபா விலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சனுக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் துஷ்மந்த சமீர எடுக்கப்பட்டார்.

துஷ்மந்த சமீர இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் 2021 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.

அவர் 2022 ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Post a Comment

0 Comments