Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

30 பில்லியன் யூரோக்களை கடந்துள்ள ஜேர்மனி – இந்திய இரு தரப்பு வர்த்தகம்...!


இந்தியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இருபக்க வர்த்தகம் 30.8 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது என்று இந்திய – ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் ஸ்டீபன் ஹலுசா தெரிவித்துள்ளார்.

திறமைமிகு தொழிலாளர்கள் கிடைக்கப்பெறுதல், தொழிலாளர்களுக்கான செலவு குறைவாகக் காணப்படுதல், நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை என்பவற்றின் பின்புலத்தில் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துவதற்கு ஜேர்மனிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்தேசிய தொழில்சார் சேவைகள் நிறுவனமான கே.பி.எம்.ஜி இந்திய-ஜேர்மனி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து நடாத்திய ஆய்வு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், ஜேர்மனியைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள நேரடி மற்றும் மறைமுக முதலீடுகள் 23.9 பில்லியன் ஈரோக்களைத் தாண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவிலுள்ள ஜேர்மன் நாட்டு தூதரக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இவ்வாய்வில் 80 சதவீதமான ஜேர்மனிய நிறுவனங்கள் பங்குபற்றியுள்ளன. அடுத்துவரும் 5 வருடங்களில் வருமானம் அதிகரிக்கலாமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்நிறுவனங்களில் 74 சதவீதமானவை அடுத்த 5 வருடங்களில் அதிக இலாபம் கிடைக்கப்பெறும் என நம்பிக்கையையும் தெரிவித்துள்ளன.

சுமார் 2000 ஜேர்மனிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஓட்டோமொபைல், வாகன விநியோகம், மருந்துப்பொருட்கள், மின்சார இராசாயங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments