Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதி…!


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதற்கான அவரது உடல் மற்றும் உள தகைமை தொடர்பில் சொந்தக் கட்சிக்குள் சந்தேகம் வலுத்துவரும் நிலையில் வெள்ளை மாளிகை அதனை நிராகரித்துள்ளது.

வழக்கத்திற்கு மாறாக ஜனாதிபதி போட்டியில் இருந்து 81 வயதான பைடனை விலகும்படி அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘நான் எங்கேயும் போகப்போவதில்லை’ என்று பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஜனாதிபதியின் பேச்சாளர், அவர் வெளியே குறிப்பிடாத சுகவீனம் ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்தியை நிராகரித்தார். பைடனை எதிர்த்துப் போட்டியிட திட்டமிட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கடந்த ஜூன் 27 ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்தில் பைடனின் செயல்பாடு மோசமாக இருந்ததாக பரவலாக விமர்சிக்கப்படும் நிலையிலேயே அவரது உள தகைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பைடன் மந்தமான பேச்சுக்கு வழிவகுக்கக்கூடிய பார்கின்சன் நோய்க்கு சிகிச்சை பெறுவதாக வெளியான ஊகத்தை வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரின் ஜீன் பியர் நிராகரித்துள்ளார்.

கடந்த ஆண்டு தொடக்கம் பார்கின்சன் மருத்துவ நிபுணர்கள் எட்டுத் தடவைகள் வெள்ளை மாளிகைக்கு வந்திருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் சிலர் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலக அழைப்பு விடுத்த நிலையில், அவர் மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. சிலர் துணை ஜனாதிபதி கமாலா ஹாரிஸை தேர்தலில் நிறுவத்துவதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

ஓஹியோவின் பிரதிநிதியான டிம் ரியான், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.

‘நாம் முன்னோக்கி செல்லும் சிறந்த பாதை கமலா ஹாரிஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று அவர் நியூஸ் வீக் இதழில் எழுதியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நன்றி.!
தினகரன்

Post a Comment

0 Comments