சென்னை: தஞ்சை மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வியால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாணவச் செல்வங்களே! இன்றியமையாத உயிரை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள்.
இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
0 Comments