நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் அதிரடியான சாதனைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். அதாவது, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த வருட ஒலிம்பிக்கில், 200 மீ. ப்ரஸ்டோரக், 200 மீ. பட்டர்பிளை, 200 மீ. மெட்லே, 400 மீ. மெட்லே ஆகிய போட்டிகளில் லியான் மர்ச்சண்ட் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 4ஒ400 மீ. மெட்லே லிலேவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments