Trending

6/recent/ticker-posts

பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பட தற்காலிக தடை...!


பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு பிரேசில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பதில் அளிக்கும்படி எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் தரப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும். தவறினால் பிரேசில் எக்ஸ் நிறுவனம் முடக்கப்படும் என உத்தரவிட்டு இருந்தது.

பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் ஏற்க எலன் மஸ்க் மறுத்துவிட்டார். இதனையடுத்து, எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீதிபதி அலெக்ஸ்ண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments