Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Kerala: வயநாடு மண்சரிவில் புதைந்த 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை...!


இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த 30ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மண்சரிவினால், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் முற்றாக அழிந்துபோயின.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370ஆக உயர்ந்துள்ள நிலையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 67 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளன.

இதன் காரணமாக 67 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளன.

புத்துமலை பகுதியில் ஹாரிசன் தேயிலைத் தோட்டத்தில் அனைத்து மத வழிபாட்டுடன் அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments