முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் நேற்று (23) இலங்கை விமானம் மூலம் திரிபுவன் (Tribhuvan) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது நாட்டில் அமைந்துள்ள பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்திற்காக நேபாளத்தில் உள்ள சௌத்ரி குழுமத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவருவதாகவும், அவர் இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தொடர்புடைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணம் அரசியல் சார்ந்தது அல்ல என்றும், தனிப்பட்ட பயணம் என்றும் myRepublica செய்திச் சேவை மேலும் தெரிவிக்கிறது.
கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ சமய சடங்குகளுக்காக இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
அதன் நீட்சியாக தற்போது நேபாளம் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments