2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவை சம்பள மற்றும் கொடுப்பனவு உயர்வுக்கான நிபந்தனைகள் உள்ளடங்கிய ஜனாதிபதி விசேட குழுவின் இறுதி அறிக்கை குறித்த குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்னவினால் ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.அரச சேவை சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிப்பு தொடர்பிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதியமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரினதும் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்பதே தனது நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments