Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தபால் வாக்குச் சீட்டு விநியோகம் இறுதிக் கட்டத்தில்...!


2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் விநியோகம் 95% நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய தபால் மூல வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகள் நாளை (02) விநியோகிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

712,318 அரச ஊழியர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான தபால் மூல வாக்களிப்பைக் குறிக்க தகுதி பெற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments