Trending

6/recent/ticker-posts

Live Radio

கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!


புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments