Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மத்திய கிழக்கில் தோன்றியுள்ள யுத்தத்தினால் இலங்கையும் பாதிக்கப்படுமா..?



மத்திய கிழக்கில் தோன்றியுள்ள யுத்த வெப்பம் காரணமாக இலங்கையும் பாதிக்கப்படலாம் என நிபுணர் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மத்திய கிழக்கில் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரமும் அந்தளவுக்கு பாதிக்கப்படலாம் என சர்வதேச தகவல் ஆய்வாளர் திரு.மோஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால் அது இலங்கைக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச தகவல் ஆய்வாளர் திரு.மோகன் சமரநாயக்க தெரிவித்தார்.

உலகின் பலம் வாய்ந்த நாடுகள் மத்திய கிழக்கில் உள்ள மோதலில் தலையிட்டு வரும் இந்த தருணத்தில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments