அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பியவுடன் இராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பணியிலிருந்து நீக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாகவும் இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தில் தற்போது 15,000 க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது
(டெலிகிராப்)
0 Comments