Google-ளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இந்தியாவில் அறிமுகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்கு தளம் உள்ள செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், கன்னடம் ,மலையாளம், இந்தி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் பயன்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது . செல்போன்களில் கூகுள் அசிஸ்டன்ட்டிற்கு பதிலாக ஜெமினியை பயன்படுத்தலாம். அதிகபட்சம் 1500 பக்க ஆவணங்கள் 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரம் பெற முடியும்.
இந்தியா தவிர துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த ஆப் உங்களுக்கு தேவையான உதவியை பெற தட்டச்சு செய்ய , பேச அல்லது படத்தை சேர்க்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments