யார் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டனர் என இருதரப்பு சிந்தனைகள் தோன்றியுள்ளதால் அறுகம்பை நிலைமை தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
“தாக்குதல் சில பயங்கரவாதக் குழுவால் தொடங்கப்பட்டதாக சிலர் நம்புவதால் குழப்பம் இன்னும் நிலவுகிறது, மற்றவர்கள் அதை பாதாள உலகக் குழு திட்டமிட்டதாக நம்புகிறார்கள். இந்த குழப்பம் இலங்கையின் சுற்றுலாத்துறை வருவாயில் சில மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கணேமுல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் விஜேவர்தன கூறினார்.
0 Comments