வெளிநாட்டு ஊழியர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமங்கள் கடந்த காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பான அறிக்கை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.
வெளிநாட்டுத் ஊழியர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.
அதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறையை கடந்த அரசாங்கம் ஆரம்பித்தது.
தகுதியான வௌிநாட்டு ஊழியர்கள் இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர முழு மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இதுவரை வழங்கப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட உரிமங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய சிறப்பு தணிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்தப் பின்னணியில், குறித்த உரிமங்களைப் பெறத் தகுதியுடைய ஏராளமான வெளிநாட்டுத் ஊழியர்கள் அந்த உரிமத்தைப் பெறவில்லை என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
0 Comments