Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



முன்னாள் அமைச்சர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…!



முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ரமேஸ் பத்திரன ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளுக்குத் தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் இன்று முற்பகல் 10 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சென்ற 11ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்குக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை அறியப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களான ரமேஸ் பத்திரன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments