நியூசிலாந்தில் மக்களுக்கு எதிரான திருத்த சட்டமூல நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மூலத்தின் நகலை கிழித்து இளம் எம்பி 22 வயதான ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹக்கா முழக்கத்தில் ஈடுபட்டதுடன் மற்ற உறுப்பினர்களும் அவருடன் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இதனால், அவைத் தலைவர் ஜெர்ரி பிரவுன்லி அமர்வை தற்காலிகமாக நிறுத்தி ஒத்திவைத்தார்.
1840 ஆம் ஆண்டு அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும் இடையே போடப்பட்ட வைடாங்கி ஒப்பந்தத்தின்படி, அவர்கள் பயன்படுத்திய நிலங்களை தாங்களே வைத்துகொள்ளலாம் என்றும், ஆங்கிலேய அரசுக்கு ஒப்படைக்காமல் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடி மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்திருத்தம் நியூசிலாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மற்றும் அவரது தந்தை இருவரும் தே பதி மவோரி தொகுதியில் போட்டியிட்டனர். ஆனால், இளம் வேட்பாளர் என்ற முறையில் ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0 Comments