Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இன்றைய தங்க நிலவரம்: மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை...!



இலஙடகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (25) அதிகரித்துள்ளது.
 
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 214,000 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 197,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,671.72 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments