ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (05) பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தியது.
பின்னர் விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு பேரணியாக வந்திருந்தனர்.
துணைவேந்தர், கணக்காய்வாளர், முகாமைத்துவ பீடங்களின் கோரிக்கைக்கு அமைய மாணவர் சங்கங்களை ஒடுக்கும் சதித் திட்டத்தை உடனடியாக மீளப் பெறுமாறு கோரி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற வகுப்புத் தடையை நீக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் வந்த மாணவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 6 மாணவர்களுக்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது
0 Comments