Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நடைபெற்ற தேர்தலின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் நிலைப்பாடு…!



நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றது என தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலகுவில் தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கம் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் அவர்களை தேர்வு செய்துள்ளார்கள் எனவும் மக்களின் ஆணையை மதிப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நாடு முன்னேறவும் இடம் உண்டு வீழ்ச்சி அடையவும் இடமுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் பின்னடைவை சந்தித்த காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் இடம்பெறாது என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த காரணத்திற்காகவும் போராட்டத்தை விட்டு விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தரப்பிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து தான் கவலை அடைவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments