Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இவ்வாண்டு மட்டும் சுமார் 12000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவு...!



வடமாகாணத்தில் உள்ள பாலூட்டிகளின் இரத்த மாதிரிகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள எலிக்காய்ச்சல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாக அதன் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மாதிரிகள் கால்நடை மருத்துவ திணைக்களத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களில் யாழ்.மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழையுடனான காலநிலையினால் எதிர்காலத்தில் வட மாகாணத்தில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு சுமார் 12,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments