Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இன்றைய தங்க நிலவரம்...!



நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (30) நிலையான நிலையில் உள்ளது.

அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 210,000 ரூபாவாக உள்ளது.

அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 193500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,622.25 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

இதேவேளை, அகில இலங்கை நகை வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொழும்பு கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

இதன்போது செயற்குழுவின் புதிய கவர்னராக செல்வராஜ் பிள்ளை, என். ஸ்ரீனிவாசன், ஆர். மகேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவராக ஆர். சரவணன், பொதுச்செயலாளராக ஆர். பாலசுப்ரமணியம், பொருளாளராக தவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டத்தின் போது முன்னாள் தலைவர் விஜயகுமாருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments