Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது - முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்...!



இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது என இஸ்ரேலின் முன்;னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார்.

ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வடகாசாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கொமாண்டோக்கள் சார்பில் நான் பேசுகின்றேன்,அங்கு யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டெமோகிரட் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் இஸ்ரேலிய அரசாங்கம் கைப்பற்றுவதற்கும் தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கும் இன சுத்திகரிப்பினை மேற்கொள்வதற்கும் என அவர் தெரிவித்துள்ளார்

கடும்போக்காளர்கள் காஜாவில் யூதகுடியேற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்,காசாவின் வடபகுதியில் உள்ள மக்களை காலவரையறையின்றி அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments