Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அறிவிப்பு...!



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று உத்தரவிட்டுள்ளது

ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லையெனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments