அரச சேவை ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை ஆராய்வது மற்றும் ஊழியர் முகாமைத்துவம் தொடர்பில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய ஆணைக்குழு, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் யாப்பு ரீதியிலான நிறுவனங்களிலும் மாகாண சபைகளிலும் காணப்படும் நிர்வாக குழுவை மீளாய்வு செய்து தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும், சேவை தேவைக்கமைய நிர்வாக குழுவை மீள பணிகளுக்கு அமர்த்துவது தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே இந்த குழுவின் நோக்கமாகும்.
இதற்கென பிரதமரின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
0 Comments