இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்ட காசாமருத்துவமனையின் இயக்குநர் தடுப்பு முகாம் என கருதப்படும் இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார இறுதியில் விடுதலை செய்யப்பட்டுள்ள இரண்டு பாலஸ்தீனிய கைதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
கமால் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட பின்னர் மருத்துவர் அபு சபியாவை எவரும் இதுவரை காணவில்லை.
ஹமாஸ் உறுப்பினர் என சந்தேகிப்பதால் அவரை தடுத்துவைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.மருத்துவமனை ஹமாசின் கட்டளை பீடமாக செயற்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட வைத்தியர் எங்கிருக்கின்றார் என்பதற்கான விபரங்களை வெளியிடுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை வைத்தியரும் மருத்துவமனையில் கைதுசெய்யப்பட்ட ஏனையவர்களும் காசா எல்லையில் உள்ள இஸ்ரேலின் நெகெவ் பாலைவனத்தில் உள்ள இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவரை தாங்கள் பார்த்ததாக வார இறுதியில் விடுதலை செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை அவரது பெயர் வாசிக்கப்பட்டதை கேட்டதாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments