Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: 179 பேரின் உயிரை பறித்த விமான விபத்து; விரிவான விசாரணைக்கு தென்கொரியா உத்தரவு...!



179 பேரின் உயர்களை பறித்த கொடிய விமான விபத்துக்கான காரணம் என்ன என்பதைத் தீர்மானிக்க தென் கொரிய அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

பல தசாப்தங்களில் பதிவான நாட்டின் மிக மோசமான விமானப் பேரழிவு குறித்து தேசம் வருத்தமும், அதிர்ச்சியும் மற்றும் வெட்கமும் அடைந்துள்ளது.

இதனிடையே தென் கொரியாவின் செயல் தலைவர் சோய் சாங்-மோக் (Choi Sang-mok) திங்களன்று நாட்டின் முழு விமான இயக்க முறைமையிலும் அவசர பாதுகாப்பு ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதேநேரம், நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், மோசமான பேரழிவுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியவும் தென்கொரிய புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர்.

தாய்லாந்திலிருந்து தென்கொரியாவுக்கு 181 பயணிகளை சுமந்து வந்த ஜெஜு ஏரின் 7C2216 விமானம் ஞாயிற்றுக்கிழமை (29) முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை​யில் அடிப்​பகுதி உரசி​யபடி சென்ற நிலை​யில், திடீரென ஓடுபாதை​யில் இருந்து விலகி பலத்த வேகத்​தில் சுற்றுச்​சுவரில் மோதி​யது.

இதனால் விமானம் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் அனைத்து பயணிகளும் ஆறு பணியாளர்களில் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் இருந்து இரண்டு பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பறவைகள் தாக்கியதே விபத்துக்கான காரணம் என அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.

அதையடுத்து, நாட்டில் இயங்கும் அனைத்து 101 போயிங் 737-800 விமானங்களையும் சிறப்பு ஆய்வு நடத்துவதாக சியோல் தெரிவித்துள்ளது.

தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படும் இந்த விபத்தையடுத்து 7 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments