Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கனடாவில் சர்வதே மாணவர்களுக்கான அனுமதி குறைப்பு...!



கனடா அரசாங்கம் சர்வதே மாணவர்களுக்கான அனுமதியை குறைத்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 10சதவீதமாக மாணவர்களுக்கான அனுமதி குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்களின் வருகை கனேடிய அரசாங்கத்துக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் மருத்துவப் பிரச்னைகள் உருவாகியுள்ளதால் இதனைச் சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டே புதிய கட்டுப்பாடுகளை கனேடிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதன்படி, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். சில குறிப்பிட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வேலை செய்வதற்கு வழங்கப்படும் விசாக்களை நிறுத்தி வைப்பதாகவும் கனேடிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதன்படி 2023ல் 6,50,000 மாணவர்களுக்கு விசாக்களை வழங்கிய கனேடிய அரசாங்கம் 2024 இல் 4,37,000 மாணவர்களுக்கு மட்டுமே விசாக்களை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments