Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம்...!



இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி வர்மன். ஜலமர்மரம் என்ற மலையாள திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர்.

அதன் பிறகு தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் 5 ஸ்டார், ஆட்டோகிராஃப், அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, ஜப்பான், இந்தியன் 2 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ள ரவி வர்மன் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார்.

அந்த வகையில், அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினர் ஆகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரவிவர்மன் பெற்றுள்ளார்.

முன்னதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்த சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments