
அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 91 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த 30 வேகமானிகளும் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பணிப்பாளருக்கும் குறித்த வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
0 Comments