Trending

6/recent/ticker-posts

Live Radio

பயன்படாத விமானங்களுக்கு வீண் செலவு...!



 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று விமானங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், அவற்றுக்காக மாதத்திற்கு கிட்டத்தட்ட 900,000  டொலர்கள் தவணை முறையில் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது மொத்தம் 22 விமானங்களைக் கொண்டுள்ளது என்றும் இன்று பாராளுமன்றத்தில் அவர் இதனைத் கூறியுள்ளார்.

 

இதற்கிடையில், தற்போது  ​​பிரதான விமான நிறுவனத்தில்  மொத்தமாக  6,056 ஊழியர்கள்  பணிபுரிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments