50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் பாரிய சர்வதேச மாநாடான Innovation Island Summit Sri Lanka 2025 கொழும்பில் இன்று(20) ஆரம்பமாகின்றது.
மாநாட்டின் பிரதம உரையை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆற்றவுள்ளார்.
இலங்கையை உலகளாவிய புத்தாக்க மையமாக மாற்றும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
50 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், பல்வேறு துறைகளின் உயர்மட்ட நிபுணர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்மூலம் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் திறன்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் பிரபல்யமடைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகின்றது.
இந்திய சுற்றுலா மேம்பாட்டின் தந்தையாகத் திகழும் Incredible India எண்ணக்கருவின் ஸ்தாபகர் Amitabh Kant இன்றைய மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
0 Comments