
புவிக்கு திரும்ப முடியாமல் விண்வௌியில் அகப்பட்டுக் கொண்டுள்ள விண்வௌி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸும் விண்வௌி வீரர் புட்ச் வில்மோரும் எதிர்வரும் 16 ஆம் திகதி புவிக்கு திரும்புவார்கள் என்று நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவர் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 09 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் 16 ஆம் திகதி பூமி திரும்புவர் என நாசா தெரிவித்துள்ளது. சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள். நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலம் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
அந்த விண்கலத்தில் இரண்டு இருக்கைகள் சுனிதா மற்றும் வில்மோருக்காக காலியாக விடப்படும். அந்த விண்கலத்தில் அவர்கள் நால்வரும் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது அதன்படி அவர்கள் நான்கு பேரும் மார்ச் 16 அன்று ஒன்றாகத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments