Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்...!



ஆண்களுக்கு நிகராக பெண்களும் இப்போது பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகிறார்கள். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சம உரிமை கிடைக்காமலும் இருந்த காலத்தில் உரிமைகளுக்காக பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த கிளாரா ஜெட்கின்.

கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்தவர். அவர் பிறந்த 1857-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கின் பல இடங்களில் பெண்களின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடந்தன. அது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த கிளாராவுக்கு சிறு வயதிலேயே போராடும் குணம் உருவானது. சிறு வயதிலேயே பல போராட்டங்களில் பங்கேற்றார். மேலும், பெண்களின் உரிமையை நிலைநாட்டும் நோக்கில் படித்து சட்டத்தரணியானார்.

Post a Comment

0 Comments