
நாட்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல தசாப்தங்களாக இருந்துவரும் பாடத்திட்டங்களே தற்போதும் இருந்து வருகின்றன.
அதனால் நவீன உலகத்துக்கு ஏற்றவகையில் எமது பாடத்திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
எமது நாட்டில் பாடசாலைகளில் இருந்து வரும் கல்வி திட்டம் முதல் பல்கலைக்கழகங்களில் இருந்துவரும் கல்வித்திட்டம் வரை பல தசாப்தங்களுக்கு முன்பிருந்த கல்வித்திட்டங்களே இருந்து வருகின்றன.
இவை மாற்றப்பட வேண்டும். எமது அண்மித்த நாடான இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் நவீன துறைகளுக்கேற்ற வகையில் அந்த நாடுகளின் பல்கலைக்கழங்களின் கல்வித்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
0 Comments