Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: ஹீத்ரோவுக்கான செயல்பாடுகள் குறித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை...!



2025 மார்ச் 21 அன்று மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த UL 503 (கொழும்பு முதல் லண்டன் வரை) மற்றும் இரவு 08:40 மணிக்கு புறப்படவிருந்த UL 504 (லண்டன் முதல் கொழும்பு வரை) விமான பயணங்கள் பாதிப்படைந்துள்ளன.

லண்டனின் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தைத் தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையம் மின் தடை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

எனவே, ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ், மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் வரை பொறுமை மற்றும் ஒத்துழைப்ப வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், விமான நிறுவனம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

மேலும், ஹீத்ரோ மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கு விமானங்களை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.

உதவி தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 (இலங்கைக்குள்), +94117 77 1979 (சர்வதேசம்) அல்லது +94744 44 1979 (வாட்ஸ்அப் அரட்டை) என்ற எண்ணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது அவர்களின் பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments