
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைக்க வேண்டும் என்று கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் ‘கனடா விற்பனைக்கு அல்ல எனவும் அதனை ஒரு போதும் விற்பனை செய்யப்போவதில் எனவும் கனடிய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில் அது தொடர்பாக கலந்துறையாடுவதற்காக நேற்றைய தினம் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மார்க் கார்னிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களின் பேச்சு வார்த்தையும் ஆரம்பமானது. குறித்த பேச்சுவார்ததையின் போது அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா இருப்பது சிறந்தது என ட்ரம்ப் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த மார்க் கார்னி கனடா விற்பனைக்கு அல்ல எனவும், ஒரு போதும் விற்பனை செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளார். ”எனினும் ஒருபோதும் இல்லை என்று சொல்லாதீர்கள் ”என ட்ரம்ப் அவரிடம் கூறினார்.
இரு தலைவர்களது மாறு பட்ட கருத்துக்களினால் வரி விதிப்பை அகற்றுவது குறித்து காரசாரமான பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப்பின் வரி விதிப்புக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையில் காணப்பட்ட உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments